Advertisment

சாலையோரத்தில் கிடந்த ஆண் சிசுவை மீட்ட காவல்துறையினர்

Police rescue male baby

Advertisment

திருச்சி திருப்பராய்த்துறை அருகே உள்ள குடில் பகுதியில் நேற்று இரவு பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையைச் சாலை ஓரத்தில் வீசிச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் உடனடியாக பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. பெட்டவாய்த்தலை காவல்துறையினர் குழந்தையைப் பத்திரமாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்குச்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

child trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe