Skip to main content

கறுப்பர் கூட்டம் சேனலை முடக்கக்கோரி யூடியூப் நிறுவனத்துக்கு காவல்துறை கோரிக்கை!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

ுப


‘கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. 


அதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் உரிமையாளர் செந்தில்வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு கைது செய்யப்பட்டார். அதையடுத்து அதன் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்தர் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் சரணடைந்த சுரேந்திரனை தமிழக போலீசார் சென்னை அழைத்து வந்தனர். எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு 30- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் சீல் வைத்தனர். இந்நிலையில் கறுப்பர் கூட்டம் சேனலை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்