Advertisment

ராணுவ வீரரை காணவில்லை; போலீஸில் புகார்

Police report missing soldier in Erode

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருப்பண்டாம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ராக்கியண்ணசாமி மகன் மணிவேல்(40). இவர், ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விடுமுறைக்கு வந்த மணிவேல் 11 நாள் ஊரில் இருந்தார். இதையடுத்து மீண்டும் வேலைக்குச் செல்ல கடந்த மாதம் 22ம் தேதி மணிவேலை அவரது சகோதரா் மணிகண்டன் கோபி பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏற்றி அனுப்பி வைத்தார்.

Advertisment

கடந்த 25ம் தேதி மணிவேலின் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து மணிவேலிவிடம் செல்போன் இல்லாததால், ஜம்மு காஷ்மீரில் உள்ள அவரது கேம்பிற்கு போன் செய்து தகவல் சொல்லியுள்ளனர். ஆனால், மணிவேல் பணிக்கு வரவில்லை எனத்தெரிவித்துள்ளனர். அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் மணிவேல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோபி போலீசில் மணிவேலின் சகோதரர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், மாயமான மணிவேலை தேடி வருகின்றனர்.

Advertisment
SOLDIER police Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe