Advertisment

திடீர் கோயிலை அகற்றிய போலீசார்!

ஈரோடு நகரின் மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதி காளை மாடு சந்திப்பு. இங்கு திடீரென செவ்வாய்க்கிழமை காலை ஒரு பீடம் அமைக்கப்பட்டு இரண்டு சாமி சிலைகள் வைக்கப்பட்டன. பிறகு சிலர் அங்கு வந்து பூஜை நடத்த தொடங்கினார்கள். அந்த வளைவான சாலையில் திடீரென சாமி சிலை வைத்து பூஜை செய்வது பற்றி ஈரோடு திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்களுக்கு தகவல் தெரிந்ததும் அங்கு ஒன்று கூடினார்கள்.

Advertisment

தொடர்ந்து அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மக்கள் பயன்படுத்தும் சாலையை மறித்து கட்டப்பட்ட திடீர் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என சாலை மறியல் செய்து கோஷமிட்டனர். அந்த இடத்துக்கு வந்த போலீசார் திட்டமிட்டே இந்த திடீர் கோயில் உருவாக்கப்பட்டதை உறுதிப்படுத்தி, ஊழியர்களை வைத்து சிலைகளை அகற்றியதோடு அங்கு கட்டப்பட்டிருந்த கோயில் வடிவவிலான கட்டிடத்தையும் இடித்து அகற்றினார்கள்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe