குடியரசு தினத்தன்று இந்தியா முழுவதும் விவசாயிகள்ட்ராக்டர்பேரணி மூலம் போராட்டம் செய்ய முடிவுசெய்திருந்தனர். காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி போராட்டம்நடத்ததமிழக விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். நாகையில் நடக்கவிருக்கும் போராட்டத்தை முடக்க மாவட்டக் காவல்துறை சார்பில் போராட்ட தடுப்பு ஒத்திகை நடத்தியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று நாடு முழுவதும்ட்ராக்டர்பேரணி நடைபெறும் என அறிவித்திருந்தனர்.ட்ராக்டர்பேரணிக்கு நாகை மாவட்டக் காவல்துறை தடை விதித்துள்ளது. காவல்துறையின் தடையை மீறி போராட்டம் நடைபெற்றால் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெற்றது.
நாகை புத்தூர்ரவுண்டானாஅருகில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் விவசாயிகள் வேடமிட்டவர்கள்ட்ராக்டருடன்போராட்டத்தில் ஈடுபடுவது போன்றும், அதனைபோலீசார்தடுத்து, அவர்களைகைது செய்வது போன்றும் தத்ரூபமாக ஒத்திகை நடைபெற்றது. இந்தப் பாதுகாப்பு ஒத்திகையில்சட்ட ஒழுங்குபோலீசார்மற்றும் ஆயுதப்படைபோலீசார்என நூற்றுக்கும் மேற்பட்டோர்வஜ்ராகலவர தடுப்பு வாகனத்துடன் கலந்துகொண்டனர். இந்த ஒத்திகை காரணமாக நாகை வேளாங்கண்ணி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.