police Recovery female body trichy

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம் காவல்நிலைய கொள்ளிடம் எல்லைக்கு உட்பட்ட ஆற்று மணல் பரப்பில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் சடலம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் இவர் லால்குடி முதுவத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி செல்வி என்பது தெரியவந்தது. மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகு உடலைக்கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.