கடற்கரையில் கிடந்த இரண்டு சாமி சிலைகளைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னைபட்டினம்பாக்கம்,சீனிவாசபுரம்கடற்கரையில் இரண்டு சாமி சிலைகள் கிடந்ததைக் கண்ட, அப்பகுதி மக்கள் உடனடியாககாவல்துறையினருக்குதகவல் அளித்தனர். சிலைகளைமீட்டுகாவல் நிலையம் கொண்டு சென்ற காவல்துறையினர். அவை கடத்தப்பட்ட சிலைகளா? சிக்கிவிடுவோம் என அஞ்சி யாராவது வீசி சென்றார்களா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடற்கரையில் கிடந்த இரண்டு சிலைகளில் ஒன்று அனுமன் சிலை ஆகும். மற்றொரு சிலை முருகன் சிலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையில்,சிலைகளுக்குகாவல் நிலையத்தில்பூஜைசெய்யப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.