ADVERTISEMENT

ஆன்லைன் மோசடி; பணத்தை மீட்ட காவல்துறை

07:46 PM Apr 14, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் அம்முண்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது செல்போனுக்கு கே.ஒய்.சி அப்டேட் செய்யுமாறு வந்த குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டுள்ளது, இதில் உடனே வங்கி, ஃபான் கார்டு விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பச்சொல்லியுள்ளது. அந்த லிங்க்கை கிளிக் செய்து அதில் கேட்ட விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார். அப்படி அனுப்பிய சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 40,000 எடுக்கப்பட்டு விட்டது. இதனால் அதிர்ச்சியான அவர் இது குறித்து ஆன்லைன் வழியாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார்.

இதேபோன்று வேலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் செவிலியர் திவ்யாவுக்கும் இதேபோல் மெசேஜ் வந்துள்ளது, அவரும் தனது தகவல்களை அனுப்பியுள்ளார். இவரின் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 19000 ஆன்லைனில் வழியாக எடுக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து இவரும் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார்களின் பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர், அவர்கள் இழந்த பணத்தை மீட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் உத்தரவுப்படி உடனடியாக சம்மந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குக்கு பணம் திரும்ப வந்துள்ளது. இதுக்குறித்து இருவருரையும் அழைத்து பணம் வந்ததை உறுதி செய்துக்கொண்டு அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.

இதுக்குறித்து சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, "ஃகால், குறுஞ்செய்தி, லிங்க் வாயிலாக வங்கி விவரங்களை பகிரக் கூடாது எனவும், விழிப்புடன் இருக்க வேண்டும், சைபர் குற்றங்களால் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT