Advertisment

குழந்தைகள் ஆபாச படம்... சென்னையில் இன்டர்நெட் மையங்களில் போலீசார் சோதனை!

சென்னையில் கல்லூரி மாணவிக்கு ஐ.பேடில் குழந்தைகள் ஆபாச படத்தை காண்பித்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இன்டர்நெட் மையங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

குழந்தைகள் ஆபாசப் படத்தை பார்ப்பதும், பரப்புவதும் குற்றம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்களை திரட்டி போக்ஸோ சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்க காவல்துறை முயற்சி எடுத்துவருகிற நிலையில் குழந்தைகள் ஆபாச படத்தை பரப்பியதாகஅண்மையில் திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 Police raids on Internet centers in Chennai

இந்நிலையில் சென்னை சூளைமேட்டை சேர்ந்த 72 வயதான மோகன் என்ற முதியவர் கல்லூரி மாணவியிடம் குழந்தைகள் ஆபாச படத்தை ஐ.பேடில்காட்டியதை தொடர்ந்து ஆயிரம் விளக்கு போலீசார் முதியவர் மோகனை போக்ஸோவில் கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் சென்னையில் 30 பேர்களின் ஐ.பி முகவரிகளை கொண்டு இன்டர்நெட் மையங்களில் பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai internet police Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe