Police raids at four locations in Chennai!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் நபர்களின் வீடுகளில் சில வாரங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து, நவம்பர் 10 மற்றும் நவம்பர் 15 ஆம் தேதிகளில் சென்னை மாநகரக் காவல்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையமூன்று பேரை கைது செய்திருந்தனர். இந்த நிலையில், சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் சாகுல் ஹமீது என்பவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisment

Police raids at four locations in Chennai!

மேலும், வேப்பேரிபூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் புஹாரி என்பவரது வீட்டிலும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏழுகிணறு பகுதியில் மூன்று இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பட்டியலின் அடிப்படையில்சோதனையானது நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரத்தகவல்கள் கூறுகின்றன.