இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவர் கைது!

police raid one person arrested

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டபகுதிகளில் இன்று (31/03/2022) மாலை காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர், பில்லூர் சோதனை சாவடியில் வாகன தணிக்கைச் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த, சையத் உசேன் (வயது 49) என்பவரின் இரு சக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது, போதைப் பொருளான 2 கிலோ கஞ்சா இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

police raid one person arrested

பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், அவரை சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.

police
இதையும் படியுங்கள்
Subscribe