Advertisment

கோவையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை!  

Advertisment

கோவையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டிசம்பர் 6. பாபர் மசூதி இடித்ததை கண்டித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தங்களுடைய ஆதரவு இயக்கங்களுடன் சேர்ந்து கருப்பு நாளாக கண்டன ஆர்பாட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது அளித்த தீர்ப்பில் இஸ்லாமிய அமைப்புகளில் பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வரும் நிலையில், சில அமைப்புகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீறாய்வுமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

Advertisment

டிசம்பர் 6 நெருங்குவதை தொடர்ந்து கோவையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம் போன்ற முக்கிய இடங்களில் இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் போலீசார் ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். சந்தேகத்துக்குறிய நபர்களிடம்விசாரணை மேற்கொண்டும் வருகிறார்கள்.

bomb threat raid police kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe