Published on 09/10/2022 | Edited on 09/10/2022

அண்மையில் தமிழகத்தில் பல இடங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஆய்வு நடத்தியிருந்தது. தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் சில குறிப்பிட்ட இயக்கங்களின் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து பிஃஎப்ஐ உள்ளிட்ட 8 இயக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கருமன்ககூடல் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகி வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பிஎஃப்ஐ நிர்வாகி தமிழ் ஷமில்கான் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் போலீசார் மடிக்கணினி, நான்கு சிம்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.