போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவருக்கு வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி (07.07.2025) வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்திய சம்பவத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கிருஷ்ணாவுக்கு போலீசார் விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இருப்பினும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதே சமயம் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதும் அவர் தலைமறைவாகி இருப்பதும் தெரிய வந்தது. 

இத்தகைய சூழலில் தான் தலைமறைவாக இருந்த கிருஷ்ணாவைப் பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் முடிக்கிவிடப்பட்டனர். நடிகர் கிருஷ்ணா கேரளாவில் சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் தலைமறைவாகிவிட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் அவரை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் போலீசார் நடிகர் கிருஷ்ணாவைப் பிடித்துள்ளனர். மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருளைப் பயன்படுத்திய விவகாரத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக இந்த விவகாரத்தில் ஏற்கனவே கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரும், சேலம் பகுதியை சேர்ந்தபிரதீப்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டனர். அதோடு நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள்பயன்பாடு பயன்படுத்தி தெரிய வந்ததையடுத்து அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் ஒரு கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே போதைப்பொருள் பயன்பாடு குறித்த விவகாரமானது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.