Published on 03/05/2020 | Edited on 03/05/2020

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், புதுப்பேட்டை, நரியங்காடு காவலர் குடியிருப்புக்கு 02.05.2020 காலை சென்று கரோனா சம்பந்தமாக ஆய்வு செய்தார். பின்னர் கரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக அங்குள்ள காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தை சார்ந்த நபர்களுக்கு அறிவுரை கூறினார். இந்நிகழ்வில் காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) எச்.எம்.ஜெயராம்,இணை ஆணையாளர் (தலைமையிடம்) ஏ.ஜி.பாபு, இ.கா.ப, துணை ஆணையாளர் (தலைமையிடம்) விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.