போலீஸ்காரர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச அழைத்துச் சென்ற தொழிலாளி குளக்கரையில் காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pudukottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், மணமேல்குடி காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ளார்.

Advertisment

கடந்த 3ஆம் தேதி இரவு தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக உறவினரான அதே பகுதியை சேர்ந்த சகாயம் (வயது 48) என்பவரை அழைத்துச் சென்றுள்ளார் ராஜேந்திரன். ஆனால் 4ஆம் தேதி காலையில் சகாயம் அப்பகுதியில் உள்ள குளத்துக்கரையில் தலையில் காயங்களுடன் சடலமாக கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து சகாயம் குடும்பத்திற்கும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

முதல்கட்ட விசாரனையில் சகாயத்தை தண்ணீர் பாய்ச்ச அழைத்துச் சென்ற போலீஸ்காரர் கூறியதாவது.. சகாயம் தண்ணீர் பாய்ச்ச வந்தார் ஆனால் இரவில் சாப்பிட்டு வருவதாக சென்ற சகாயம் வயலுக்கு திரும்பி வரவில்லை. காலையில் ரத்த காயங்களுடன சடலமாக கிடந்தார். எப்படி இந்த சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

முன்பகை காரணமாக யாரேனும் சகாயத்தை அடித்து கொன்றார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரனை செய்து வருகின்றனர்.