Police - Public Relations Program!

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் காவல் துறை இணைந்து காவல்துறை பொதுமக்கள் இடையே நல்லுறவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஒரு பகுதியாகக் கோலப் போட்டிகள் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில், ஏராளமான பெண்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பாகக் கோலம் போட்ட முதல் ஐந்து நபர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கலந்துகொண்டு கோலம் போட்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புக் காவல் படை தளவாய் ஜெயவேல் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி தளவாய் கிரிஜா, ரோட்டரி சங்கத்தின் மாவட்டத் தலைவர் வின்சென்ட் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.