rajini

Advertisment

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் மற்றும் சில அமைப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சில அமைப்புகள் ரஜினி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இத்துடன் ரஜினி வீட்டை பார்க்க வரும் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.