எம்.ஜி.ஆர். சிலைக்கு போலீசார் பாதுகாப்பு!!

pudukottai

கடந்த வாரம் பெரியார் சிலைக்கு காவி பூச்சு, அடுத்த சில நாட்களில் புதுச்சேரியில்எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு உள்ளிட்ட பிரச்சனைகள் பெரிய அளவில் பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போடப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் கடும்கண்டனம் தெரிவித்தனர். அதனால் தமிழ்நாடு முழுவதும் தலைவர்கள் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் தனி நபரால் சாலை ஓரம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலைக்கு கீரமங்கலம் போலீசார் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர். கரோனா ஊரடங்கு பாதுகாப்புப் பணிகளுக்கு மத்தியில் தலைவர்கள் சிலை பாதுகாப்புக்காவும் போலீசார் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

police protect statue
இதையும் படியுங்கள்
Subscribe