/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1399.jpg)
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ளன. இவரது வீட்டில் அடையாளம் தெரியாத சிலர் சில நாட்களாக முகாமிட்டுவருவதாக திருச்சி தனிப்படை காவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து தனிப்படை காவலர்கள், முருகன் வீட்டிற்கு வந்து, அங்கிருந்த வாலிபர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் லால்குடி ஸ்ரீராம், கன்னியாகுமரி ஸ்டீபன், மதுரை அம்ஜத்கான் என தெரிந்தது. மேலும், இவர்கள் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. சிறையில் இருந்தபோது இவர்களுக்கு நட்பு ஏற்பட்டதாகவும் தற்போது பெரிய கொள்ளை சம்பவம் ஒன்றுக்கு திட்டம் தீட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)