Police Person passes away in trichy kk nagar

இரண்டாம் நிலை கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கீதா என்ற பெண் காவலர், திருச்சி கே.கே. நகர் ஐயப்பன் கோவில் தெருவில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், தன்னுடைய வீட்டில் கார் நிறுத்துமிடத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த கே.கே. நகர் காவல்துறையினர், பெண் காவலரின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment