Police person in girl case public request to take action

திருச்சி, லால்குடி நன்னிமங்கலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தாய் தந்தையை இழந்து தற்போது அவரது பெரியம்மா பொறுப்பில் உள்ளார். சிறுமியின் தனிமையை பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் ஒருவரும், கலால் துறையில் பணியாற்றும் அவரது தம்பி உள்ளிட்ட 5 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

Advertisment

இவர்களால் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த விஷயம் தெரிந்த அந்த கும்பல், வெளியே தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதற்காக அப்பகுதியை சேர்ந்த நர்ஸிடம் கருகலைப்புசெய்ய அழைத்து சென்றுள்ளனர். அவர் அதற்காக 2.5 லட்சம் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் சிறுமிக்கு கருகலைப்பு செய்துள்ளதாகவும், இதில் சிக்கல் ஏற்படவே முதலில் ஆரம்ப சுகாதார நிலையம், பிறகு வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் போலீசாரோ உரிய வகையில் புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisment