Police people who made trouble in train

சென்னை - தூத்துக்குடி விரைவு ரயிலில் மூன்று காவலர்கள் உட்பட ஐந்து பேர் மது போதையில் பயணிகளுக்கு இடையூறு செய்துவந்துள்ளனர். அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த காவலர் மாணிக்கராஜ், அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த காவலர் முருகன், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றும்காவலர் செந்தில்குமார் மற்றும் மேலும் இருவர் எனஇவர்கள் ஐந்து பேரும் நேற்று (2ஆம் தேதி) சென்னை தூத்துக்குடி விரைவு ரயிலில் சென்னையில் இருந்து புறப்பட்டுசென்றுள்ளனர்.

Advertisment

ரயிலில் பயணம் செய்யும்போது சக பயணிகளுக்கு இடையூறாக அவர்கள் மது அருந்தியுள்ளனர். மேலும், மதுபோதையில் அருவருக்கத்தக்க வார்த்தைகளிலும் சத்தமாக பேசிவந்தனர். இவர்களின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்துவர பொறுமை இழந்த பயணிகள் விருத்தாசலம்அருகே வண்டி வரும்போது, சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விருதாச்சலத்தில் மூன்று காவலர்கள் உட்பட ஐந்து பேரையும் போலீஸார்ரயிலில் இருந்து இறக்கி விசாரித்துள்ளனர். அதில், அவர்கள் அனைவரும் ரயிலில்மது அருந்திவந்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து காவலர்கள் மூன்று பேர் உட்பட ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.