Police pay homage to freedom fighter

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகில் உள்ள பவளத்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர், சுதந்திரப் போராட்ட தியாகி. வயது முதிர்வு, உடல் நலக் கோளாறு காரணமாக இன்று உயிரிழந்தார்.

Advertisment

சுதந்திரப் போராட்டத் தியாகி அண்ணாமலை உயிரிழந்ததகவல்அறிந்து வடகாடு காவல் உதவி ஆய்வாளர் மருதமுத்து உள்ளிட்ட போலீசார், அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு போலீசார் மரியாதை செய்ததை அங்கு திரண்டிருந்த உறவினர்கள் நெகிழ்ச்சியாகப் பார்த்தனர்.

Advertisment