Police passed away in accident while returning to work

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லியோ ஆனந்த். இவர் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தான் பணியாற்றிய திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு துறையூரில் உள்ள சொந்த ஊரான காட்டுபாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை முடிந்து பணிக்குத் திரும்பிய லியோ ஆனந்த் கோட்டூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று லியோ ஆனந்த் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரான திருச்சியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.

Advertisment