A police officer was stabbed during a vehicle search

கடலூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள குமராட்சி பகுதியில் தலைமைக் காவலர் ஜெயராமன் மற்றும் முதல்நிலை காவலர் தேவநாதன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சோதனை செய்யும் நோக்கில் நிறுத்தி பேசிக்கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் இரண்டு காவலர்களையும் தாக்கி விட்டு தப்பி ஓடினார்.

Advertisment

அக்கம்பக்கத்திலிருந்த மக்கள் காயமடைந்த இரண்டு காவலர்களையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அதேநேரம் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உடனடியாக போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் தேடுதலில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட நபர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில் புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்று தெரியவந்தது. அவரை பிடிப்பதற்காக சென்றபோது விஸ்வநாதன் கீழே விழுந்து கையில் முறிவு ஏற்பட்டது. தற்போது அவரும் கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment