Advertisment

கொலை வழக்கை தீவிரமாக விசாரணை செய்யாத போலீஸ்... நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

 Police not actively investigating case ... Court orders action

Advertisment

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தீவனூர் கிராமத்தில், செங்கேணி என்பவரது மகன்காளிதாஸ் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு இவரை அதே ஊரைச்சேர்ந்த அவரது மருமகன் ராஜ்குமார்அடித்துக் காயப்படுத்தியுள்ளார். இதனால் காளிதாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து திண்டிவனத்தில் உள்ள ரோசனை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் மீது போலீசார் விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது சம்பந்தமான வழக்குதிண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜெய்சிங் தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில் ராஜ்குமாரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிபதி,இவ்வழக்கினை சரியாக விசாரணை செய்யாத காவல் ஆய்வாளர் மைக்கேல், இருதயராஜ் மற்றும் கொடிராஜ் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு கொலை வழக்கை முறையாக விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்யாத காரணத்தால், குற்றவாளி எனக் கருதப்பட்ட ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டுளார். இந்தக்காரணத்தால் இரண்டு ஆய்வாளர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பு காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

judgment villupuram police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe