ADVERTISEMENT

சமூக வலைதளங்களை தனிப்படை காவல்துறை கண்காணிக்கிறது!

05:35 PM Jul 22, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக, சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் பணித் தொடங்கியுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக, 32 வகையான வதந்தி செய்திகள் பரப்பப்பட்டது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எத்தனை வலைத்தள பக்கங்கள் வதந்தி செய்தியைப் பரப்பியுள்ளன என்பது குறித்து கணக்கெடுத்த பிறகு, அந்த பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், யூ டியூப் போன்ற சமூக வலைத்தளங்களை தனிப்படை காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT