Advertisment

செயின் பறிப்பு: மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறையினர்!

Police on a mission to find the mysterious person

Advertisment

திருச்சி மாவட்டம் மணப்பாறை கல்பாளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது தினசரி பணியை முடித்துவிட்டு வீட்டின் முன்பக்கம் உள்ள திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது வேளாங்கண்ணி அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். இதனையடுத்து வேளாங்கண்ணி கூச்சலிடவே அக்கம்பக்கத்தில் இருந்து ஓடி வந்தவர்கள் செயினை பறித்து சென்றவரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் தப்பிச் சென்றார். இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe