Published on 06/11/2021 | Edited on 06/11/2021

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (06/11/2021) காவலர்கள் நேரில் சந்தித்து, இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிட்டமைக்காக நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.