/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kerala_10.jpg)
திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை டி.எஸ்.பி ஹாிகுமாா் அடிக்கடி இரவு தனியாக குடங்கா விளை பகுதியில் உள்ள ஓரு வீட்டுக்கு காாில் வந்து செல்வார். வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு 9.30 மணிக்கு வந்த அவாின் காாின் முன் அதே பகுதி காவு விளையை சோ்ந்த எலக்ட்ரீசன் சணல்குமாா்(32) தனது காரை நிறுத்தியிருந்தாா்.
அப்போது டி.எஸ்.பி ஹரிகுமாா் அந்த காரை மாற்றி நிறுத்தச் சொல்லியிருக்கிறாா். அவா் டி.எஸ்.பி என தொியாமல் சணல்குமாா் ,இருக்கிற இடத்தில் தான் இரண்டு காரும் நிற்கிறது. இடம் இல்லாமல் வேறு எங்க நிறுத்த முடியும் என்றாா். உடனே இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது . இதனால் ஆத்திரமடைந்த டி.எஸ்.பி, சணல் குமாரை ரோட்டில் தள்ளி விட்டதில் கீழே விழுந்த சணல் குமாா் மீது அங்கு வேகமாக வந்த ஒரு காா் ஏறி இறங்கியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Harikumar.jpg)
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த சணல்குமாரை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பிய டிஎஸ்பி நெய்யாற்றின் கரை போலிசுக்கு தகவல் கொடுத்ததன் போில் போலிசாா் விரைந்து வந்து சணல் குமாரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்வதற்கு பதில் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதில் காவல் நிலையத்தில் வைத்தே இறந்த சணல்குமாரை பின்னா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Sanal_0.jpg)
இச்சம்பவம் உடனே காட்டு தீ போல் பரவியதையடுத்து அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. உடனே முதல்வர் பிணராய் விஜயனுக்கும் தொியவந்ததால் அவா் இரவோடு இரவாக டி.எஸ்.பியை சஸ்பென்ட் செய்து அவா் மீது கொலை வழக்கு பதிவு செய்ய டிஜிபி க்கு உத்தரவிட்டாா்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kerala_11.jpg)
இந்த நிலையில் செல்போனை சுவிட் ஆப் செய்து கொண்டு தலைமறைவாக இருக்கு ஹாிகுமாா் மதுரையில் உறவினா் வீட்டில் பதுங்கியிருப்பதாக கேரளா போலிசுக்கு தகவல் கிடைத்ததன் போில் மூன்று தனிப்படை போலிசாா் இன்று மதுரையில் முகாமிட்டுள்ளனா்.
இறந்து போன சணல்குமாருக்கு மனைவியும் 3 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)