தமிழகத்தில் கரோனாவின் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றனர். மேலும், பல இடங்களில் மாநகராட்சி மற்றும் காவல்துறையினரின் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கரோனா பாதுகாப்பு குறித்து ரயில்வே இருப்புப் பாதை போலீசார், இன்று (30.04.2021) தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.