Advertisment

காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டது ஏன்?  - காவல் இணை ஆணையர் விளக்கம்!

Police Joint Commissioner of  Explanation Why was the Kaka Thoppu Balaji incideny done

Advertisment

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது 14 கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய சூழலில் தான் சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் கைது செய்யச் சென்ற முயன்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக இவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி சென்னை பிராட்வே அருகே உள்ள பி.ஆர்.என் கார்டன் பகுதியில் பிறந்தவர் ஆவார். இவர் காக்கா தோப்பு பகுதியில் ரவுடிகளாக வலம் வந்த யுவராஜ் மற்றும் இன்பராஜ் உடன் தொடர்ந்து நட்பில் இருந்து வந்த நிலையில், தொழில் போட்டி காரணமாகக் கூட்டாளியான யுவராஜை காக்கா தோப்பு பாலாஜி கொன்றதாகக் கூறப்படுகிறது. அதோடு இவர் செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டு வந்தார் எனத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இவர் மீது கொலை வழக்குகள், அடிதடி, மிரட்டல், ஆட்கடத்தல் என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகச் சென்னை காவல்துறையினர் தகவல் தெரிவித்திருந்தனர்.

Police Joint Commissioner of  Explanation Why was the Kaka Thoppu Balaji incideny done

Advertisment

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையாளர் பிரவேஷ் குமார், காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “வாகன தணிக்கையின்போது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வந்த வாகனத்தில் கஞ்சா இருந்தது. இதனை கண்காணித்த போலீசார் அப்போது கஞ்சாவுடன் தப்பிச் சென்றவர்களைத் தான் போலீசார் விரட்டிச் சென்று சுற்றிவளைத்தனர். அச்சமயத்தில் காக்கா தோப்பு பாலாஜி, போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். இதனால் தான் போலீசார் பதில் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானது.

இந்த சம்பவத்தில் காக்கா தோப்பு பாலாஜியின் இடது மார்பில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் படுகாயம் அடைந்த நபரைச் சோதிக்கும்போது உயிர் இருந்தது. அதே சமயம் இந்த தாக்குதலுக்கு பிறகே அந்த நபர் காக்கா தோப்பு பாலாஜி என்பது தெரியவந்தது. இவர் மீது 58 வழக்குகள் நிலுவையில் உள்ளன. காக்க தோப்பு பாலாஜியுடன் உடன் காரில் வந்த மற்றொரு நபரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரில் இருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன” எனத் தெரிவித்தார்.

Chennai police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe