
விழுப்புரம், புறவழிச்சாலையிலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் காவல்துறைக்கு சொந்தமான கார் தீப்பிடித்து எரிந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
14ஆம் தேதி இரவு 9 மணி அளவில் ஆயுதப்படை காவலர் தியாகராஜன் என்பவர், காவல்துறைக்கு சொந்தமான காரை ஓட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென காரின் என்ஜினில் இருந்து புகை வெளிவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் தியாகராஜன், காரைவிட்டு கீழே இறங்கி சற்று தூரம் சென்று தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தார். அதற்குள் மளமளவென தீப் பரவியதைத் தொடர்ந்து கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அதேசமயம், அங்கு வந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காவல்துறைக்கு சொந்தமான கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.