Advertisment

என்ஐடி பேராசிரியரின் கார் மாயம்; மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு

Police investigation into those who stole NIT professors car

திருச்சி புத்தூர் குமரன் நகர் பேங்கர்ஸ் காலனி இரண்டாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ஆல்பர்ட் ஜெரால்ட்(53). இவர் துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 31 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் தன்னுடைய காரை தனது வீட்டின் எதிரே உள்ள காலி இடத்தில் நிறுத்தி உள்ளார்.

Advertisment

பின்னர் மீண்டும் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கார் அங்கு இல்லை, யாரோ மர்ம ஆசாமி காரைத்திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் ஆல்பர்ட் ஜெரால்ட் அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது காரைக் காணவில்லை என்று புகார் அளித்து உள்ளார். புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன காரையும் அதனைத்திருடிய மர்ம ஆசாமியையும் வலைவீசித்தேடி வருகின்றனர்.

Advertisment
police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe