Advertisment

கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி; போலீசார் தீவிர விசாரணை

Police investigating the Mystery object lying unaccounted for in Trichy

திருச்சி திருவானைக்காவல்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மகன்களானசீனிவாசன் மற்றும் விக்னேஸ்வரன்ஆகிய இருவரும் தங்களது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பிஸ்டல் ரக துப்பாக்கி கிடந்ததைக்கண்டு, அதுகுறித்து தங்களது தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து ரமேஷ், திருவரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த திருவரங்கம் போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த துப்பாக்கியானது ஏர் பிஸ்டல் என்ற வகையை சேர்ந்தது என தெரிய வந்தது.ஸ்பிரிங் இயக்கத்தில் செயல்படும் அந்த துப்பாக்கியானது 10 மீட்டர் ரேஞ்ச் உள்ளது. இதற்கு உரிமம் தேவையில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Advertisment

மேலும் இது குறித்து ஆர்ம்ஸ் ஆக்ட் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேட்பாரற்று கிடந்த துப்பாக்கியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

trichy police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe