Advertisment

பள்ளி மாணவன் கடத்தல்? - போலீஸ் தீவிர விசாரணை

police investigating missing school in villupuram

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி அழகன் குப்பம் என்ற மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி சுஷ்மிதா.இவர்களின்மகன் ஏழு வயது சிறுவன் டிஜேஸ். இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.நவநீதகிருஷ்ணன் அவரது மனைவி சுஷ்மிதா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை டிஜேசைபள்ளிக்கு கொண்டு சென்று விட்டுள்ளார் நவநீதகிருஷ்னன். மாலை மகனை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக பள்ளிக்குச் சென்றபோது பள்ளி வளாகத்தில் அவரது மகனைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நவநீதகிருஷ்ணன் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. மற்றும் உறவினரின் வீடுகளுக்கும் சென்று தேடிப் பார்த்தபோது மகனைக் காணவில்லை. இதனால் தனது மகனை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என்று கருதிய நவநீதகிருஷ்ணன் உடனடியாக மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Advertisment

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று தனித்தனியாக வசித்து வரும் நிலையில் மகனை அவரது தாய் சுஷ்மிதாவின் உறவினர்கள் யாராவது கடத்திச் சென்று இருப்பார்களோ? மேலும் பணத்திற்காக மாணவனை கடத்தி இருப்பார்களோ இப்படி பல்வேறு சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஆரஞ்சு நிற கார் ஒன்றில் மாணவன் டிஜேசை கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது இதையடுத்து போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் மரக்காணம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police student Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe