Police investigating chennai ecr car women issue

சென்னை கானத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுடன் கடந்த 25ஆம் தேதி இரவு முட்டுக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 6க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தியுள்ளனர்.

Advertisment

அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் மற்றும் அச்சமடைந்த பெண்கள் காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) இயக்கியபடி சுமார்4 கிலோ மீட்டர் அளவிற்குச் சென்று வீட்டை அடைந்தனர். அதே சமயம் இளைஞர்களும் அவர்களின் காரை கொண்டு துரத்தியுள்ளனர்.

Advertisment

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.