Advertisment

திருமணமான 4வது நாளில் இளம்பெண் மர்ம மரணம்; ஆணவக் கொலையா? - போலீசார் விசாரணை

the police investigated Young girl issue for  marriage

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா இருவரும் திருப்பூரில் ஒன்றாகப் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத்தெரியவந்துள்ளது.

Advertisment

இதையடுத்து சமாதானம் ஆனதாகக் கூறி ஐஸ்வர்யாவை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த 3 ஆம் தேதி ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ஐஸ்வர்யா தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி சடலத்தை எரித்துள்ளனர்.

Advertisment

இந்த விஷயம் தற்போது தெரியவர பூவாலூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கணவர் நவீன் அளித்த புகாரின் பேரில்,பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல்திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆணவக் கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

marriage police pattukottai Thanjavur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe