Police investigate rowdies in Ariyalur, Chennai!

Advertisment

தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுக்கும் விதமாக ரவுடிகளிடம் நள்ளிரவில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ரவுடிகளை ஒடுக்க வீடுகளிலும் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ரவுடிகளின் வீடுகளில் அதிரடியாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடந்த இந்தசோதனையில், ரவுடிகளின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 37 ரவுடிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை போலீசார் பிடித்து எச்சரித்துவருகின்றனர்.