Police investigate incident of a man being eulogized with a burnt human head

நெல்லையில் இறந்தவர்களின் உடல் பாகங்களுடன் சாமியாடிவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உப்பூர் ஊர்க்காடு சுடலை மாடசாமி கோவில் திருவிழாவில் சிலர் மனித உடல் பாகங்களுடன் சாமியாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சாமக்கொடை என்ற நிகழ்வின்போது சுடுகாட்டிற்குச் சென்று எரிந்த உடல்களை எடுத்து வந்து சாமியாடுவது உப்பூர் ஊர்க்காடு சுடலை மாடசாமி கோவில் திருவிழாவில் நடப்பது வழக்கம்.

அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற சாமக்கோடையின் பொழுது சுடுகாட்டுக்குச் சென்று வந்த சாமியாடிகள் எரிந்த மனித தலை, கை உள்ளிட்ட உடல் பாகங்களுடன் சாமியாடினர். இந்த காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில், வெள்ளங்குளி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சாமியாடிய 5 பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.