Advertisment

கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ இதயவர்மனிடம் போலீசார் விசாரணை!!

Police investigate DMK MLA

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள இள்ளலூர் கிராமத்தில் உள்ள திமுக எம்எல்ஏ இதயவர்மன் வீட்டின் பின்புறம் தாண்டவமூர்த்தி, குமார் சகோதரர்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. தங்களது நிலத்தை விற்க வசதியாக அங்கு உள்ள அரசு நிலத்தை சாலை அமைக்க தாண்டவமூர்த்தி, குமார் ஆகியோர் ஆட்களுடன் வந்தாகவும், அப்போது தகவல் அறிந்த திமுக எம்ல்ஏ இதயவர்மன் தந்தை லட்சுமிபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதனை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் தாண்டவமூர்த்தி, குமார் தரப்பினர் அரிவாளால் எதிர்தரப்பினரை வெட்டியதாகவும், இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும கூறப்படுகிறது. லட்சுமிபதி தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் பதிலுக்கு தாண்டவமூர்த்தி, குமார் தரப்பில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அந்த வழியே சென்ற சீனிவாசன் என்பவர் மீது குண்டு பாய்ந்து காயமடைந்தார்.இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்சென்னை அருகே மேடவாக்கத்தில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனைபோலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டில் உள்ள தனியார் மகாலில் வைத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

arrest MLA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe