/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/art-img-police-siren_20.jpg)
திருச்சியை அடுத்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புஒன்றில் வசித்து வந்தவர் ராதா (வயது 70). இவர் திருச்சி அரசு மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ரஜினி என்ற மகன் உள்ளார். இவர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். தனது மனைவிபிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளநிலையில், அவரை பார்க்க ரஜினி சென்றிருந்தார்.இதனால், கடந்த 3-ம் தேதி ராதாவீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராதா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஆனால், வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் தான் இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வீட்டுக்கு வந்த ரஜினி, தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து பார்த்த போது, ​​வீட்டில்தனது தாயார் கொலை செய்யப்பட்டுகிடப்பதையும், அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் கொள்ளைபோய் இருந்ததையும்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராதாவுக்கு சொந்த ஊர் லால்குடி அடுத்த ஆலம்பாக்கம் என்பதும், ஆலம்பாக்கத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் மனைவி காந்தி என்பவருடன்பழக்கம் ஏற்பட்டுள்ளதும்,காந்தி முத்தரசநல்லூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதும், அப்போது ராதாவுடன்அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார்காந்தியை பிடித்து நடத்திய விசாரணையில், காந்திதான் நகைக்காக ராதாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து,போலீசார் காந்தியை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். பின்னர், அவரைகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)