Skip to main content

கீழக்கரையில் காவல்துறை சார்பாக புதிய செயலி மாணவர்களுக்கு அறிமுகம்!!

indiraprojects-large indiraprojects-mobile

 

app

 

தமிழ்நாடு காவல்துறை சார்பில் KAVALAN SOS என்ற புதியசெயலியை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் அறிமுகம் செய்தனர்.

 

இதையடுத்து இன்று கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேனிலைப்பள்ளி தாளாளர் டாக்டர்.சாதிக் தலைமையில், கீழக்கரை காவல் ஆய்வாளர் முத்து மீனாட்சி இந்த செயலியின் செயல்பாடுகள் குறித்து மாணவ,மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.மேலும் இந்த செயலியானது பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், முதியோர் எளிதாக பயன்படுத்தகூடிய வகையிலும், இணைய இணைப்பு இல்லாத இடங்களில் எஸ்.எம்.எஸ் மூலமாக செயல்படும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் ஆன்ராய்டு மற்றும் ஐபோன்களில் KAVALAN SOS என்ற செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

 

app

 

காவலன் SOS என்ற பட்டனை தொட்டால் உங்கள் போனில் உள்ள GPS தானாக இயங்க ஆரம்பித்து அலைபேசி கேமரா தானாகவே 15 வினாடிகள் ஒலி, ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைத்துவிடும். இதை வைத்து காவல்துறை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்துவிடலாம் என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...