Police intensive search at Chepakkam stadium

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிரசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டி மற்றும் கடைசி போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நண்பகலில் நடைபெற இருக்கிறது. நேற்று முதல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மைதானம் சீரமைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின்பு முதன்முறையாக சர்வதேச போட்டி நடைபெற இருப்பதால் அதனைக் காண சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக குவிந்துள்ளனர்.

Advertisment

இதன் காரணமாக பெல் சாலை, பாரதி சாலை, காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தின் வெளிப்பகுதிகளில் இந்திய அணியின் ஜெர்சி, மூவர்ணக் கொடி விற்பனைகள் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் மோப்ப நாயுடன் வந்த காவல்துறை அதிகாரிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.