Advertisment

துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல்; சென்னையில் பரபரப்பு!

police intensive investigation for Chennai thuraiPakkam woman incident 

துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பெண் கொலை ஒருவர் கொலை செய்யப்பட்டுத் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் உடலை சூட்கேஸில் அடைத்து சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் சாலையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் மணலியைச் சேர்ந்த தீபா எனத் தெரியவந்துள்ளது.

Advertisment

மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த தீபா துரைப்பாக்கம் வந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு அவரது உடல் இங்குக் கொண்டு வரப்பட்டு மர்மநபர்கள் வீசி சென்றார்களா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Chennai police woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe