ADVERTISEMENT

ஸ்டாலின் பிரச்சாரத்தை தடுக்க நினைத்த போலீஸ்; நள்ளிரவில் அனுமதி வாங்கிய வழக்கறிஞர் குழு

10:23 AM May 18, 2019 | tarivazhagan

தமிழக இடைத்தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக கடந்த முறை நின்று ஜெயித்து, தற்போது கட்சிக்கு நேர் எதிர் வேட்பாளராக நின்று கடந்த முறை வென்ற எண்ணிக்கையை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து காட்டுவேன் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துவருகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அதிமுகவில் 10 அமைச்சர்கள். அமமுகவில் முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் என கூட்டு சேர்ந்து எப்படியும் செந்தில்பாலாஜியை தோற்கடித்தே ஆக வேண்டும் என்று முழு வீச்சில் பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்து திமுக ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு முட்டுகட்டை போட நினைத்தாலும் செந்தில்பாலாஜியும் அவர்கள் வழக்கறிஞர் அணியும் அதனை மீறி அனுமதி வாங்கியுள்ளது. இது ஆளும் கட்சியினர் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. என்கிறார்கள் திமுகவினர்.

திமுக தலைவர் ஸ்டாலின் இறுதி நாள் பிரச்சாரத்திற்காக செந்தில்பாலாஜி 12 இடங்களை கேட்டு ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். ஆனால், தேர்தல் கண்காணிப்பாளர்கள் பிரச்சாரத்திற்கு முந்தின நாள் 4 இடங்கள் மட்டுமே அனுமதி கொடுத்தார். எங்களுக்கு எல்லா இடங்களும் வேண்டும் என்று அரவக்குறிச்சி தேர்தல் பார்வையாளர் மீனாட்சி முன்பு காலை 10 மணிக்கு சென்றவர்கள் இரவு 10 மணிவரை அந்த அறையிலேயே இருந்து அனுமதி கொடுக்கும் வரை போக மாட்டோம் என்று உள்ளிருப்பு போராட்டம் போல் நடத்தினார்கள். இதனால் அதிகாரிகள் செல்போனில் மேலிட அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். ஆனால் அவர்களால் அனுமதி கொடுக்காமல் இருப்பதற்கு சரியான காரணத்தை சொல்ல முடியாமல் இருந்தது.

ஒரு கட்டத்தில் கடுப்பான செந்தில்பாலாஜி, “எவ்வளவு நேரம்தான் இங்கையே இருப்பது” என டி.எஸ்.பி.யை காட்டி “இவுங்க கிட்ட இப்படி கேட்டா நியாயம் கிடைக்காது. போய் ரோட்டில் படுத்தா, தானா வழி பிறக்கும்” என்று கடுமையாக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வெளியேற முயற்சி செய்தார். செந்தில்பாலாஜியின் இந்த போராட்டத்தை வழக்கறிஞர் குழுவில் உள்ள சீனியர் மணிராஜ் உள்ளிட்டோர் அவரை தடுத்து அமைதிப்படுத்தினார்கள். இதற்கு இடையில் திமுக திண்டுக்கல் சக்கரபாணியும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் வழக்கறிஞர் குழுவிடம் சேர்ந்து கொண்டனர்.

8 இடங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கிறோம் என்றவர்கள் கடைசியில் நாங்கள் சொல்ற நேரத்திற்கு நீங்க பிரச்சாரம் பண்ணுங்க என்று புதிதாக 12 இடங்களுக்கான நேரத்தை ஒதுக்கி கொடுத்தனர்.

திமுகவினர் மாலை பள்ளப்பட்டியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டதை போலீஸ் தரப்பில் நீங்கள் காலையில் பிரச்சாரம் பண்ணுங்கள் என்று தெரிவித்தது. ஆனால் செந்தில்பாலாஜி, “என் தலைவர் பேசுவதற்கு நீங்க யார் அனுமதி கொடுக்கிறது. நீங்கள் கொடுத்த எதையும் நாங்க ஏற்றுக்கொள்ளவில்லை. நான் தலைவரை வரவேற்க செல்கிறேன்” என்று அங்கிருந்து கிளம்பினார்.

பிரச்சாரத்தின் இறுதிநாள் தேர்தலை நிறுத்துவதற்கு அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் நேரம் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அனுமதியில்லாமல் பிரச்சாரம் செய்தால் சட்ட ஓழுங்கு காரணம் காட்டி பிரச்சனை செய்வார்கள். பிறகு ஸ்டாலின் மீது வழக்கு தொடர வாய்ப்பு இருக்கு என்று வழக்கறிஞர்கள் மணிராஜ் மற்று திமுக சக்கரபாணி ஆகியோர்கள் இரவு முழுவதும் அதிகாரிகளிடம் சட்ட ரீதியாக நாங்கள் முறையாக விண்ணப்பம் செய்தும் நீங்கள் அரசியல்வாதிகளுக்கு துணை போனால் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று நெருக்கடி கொடுக்க வேறு வழியில்லாம் நள்ளிரவு 12.00 மணிக்கு முறையாக அனுமதி வாங்கி ஸ்டாலின் இறுதி நாள் பிரச்சாரத்தை நடத்தினார் செந்தில்பாலாஜி.

அரவக்குறிச்சி இறுதி நாள் பிரச்சாரத்தில் பள்ளப்பட்டி, வேலாயுபாளையம், நொய்யல், பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம், வேலஞ்செட்டியூர், ஈசநத்தம், வாவிகனம், தடாகோவில், என அனைத்து இடங்களிலும், அந்த அந்த பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், “எடப்பாடி ஆட்சியை நாம் கவிழ்க்க வேண்டியதில்லை தானாவே கவிழ்ந்து விடும். 23ம் தேதிக்கு பிறகு நம்முடைய ஆட்சி” என்று பிரச்சாரம் செய்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT