ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வாக்கு மிஷின்களான மின்னணு இயந்திரங்கள் ஈரோடு சாலைப்போக்குவரத்து கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டப்பட்ட அறைக்கு முன்பு துணை ராணுவத்தினர் தமிழக போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார் ஈரோடு தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மூர்த்தி. இவர் திடீர் என்று இன்று அதிகாலையில் மயங்கி விழுந்துள்ளார். இவருடன் பணியில் இருந்தவர்கள் ஆய்வாளர் மூர்த்தியை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் ஆய்வாளர் மூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்று கூறி இருக்கிறார்கள்.