பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கிய காவல் ஆய்வாளர்! (படங்கள்)

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையொட்டி சென்னை பாரிமுனை பூக்கடை மார்க்கெட் பகுதி முழுவதும் பொதுவெளியில் வரும் மக்கள் மற்றும் பஜார்களில் பணிபுரியும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் மீறுபவர்கள் மீது அபராதம் விதித்தும் அறிவுரை கூறியும் அனுப்பி வைக்கின்றனர். பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தளவாய் சாமி மற்றும் போலீசார், மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலவச முகக்கவசம் வழங்கினார்கள். முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.

Chennai Mask police
இதையும் படியுங்கள்
Subscribe