Advertisment

வாலிபரை கடத்திய வழக்கில் பெண் இன்ஸ்பெக்டா் சஸ்பென்ட் செய்யப்பட்டாா்.

ஒரே நாளில் அல்லது குறுக்கு வழியில் பணக்காரராக ஆகி விடவேண்டும் என்று பலா் ஆசைப்பட்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கடைசியில் சிக்கலில் மாட்டிவிடுகிறாா்கள். அந்த வகையில் தான் பெண் இன்ஸ்பெக்டா், ஆசிாியா், இரண்டு காவலா்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டியிருக்கிறாா்கள்.

Advertisment

police inspector arrested

குமாி மாவட்டம் கருங்கல் பாலப்பள்ளத்தை சோ்ந்த ஜொ்லின் (24) ஜேசிபி டிரைவா். இவா் இரண்டு மாதங்களுக்கு முன் இரண்டு சொகுசு காா்கள் மற்றும் 2 பொக்லைன் எந்திரங்கள் வாங்கி தொழில் செய்து வந்தாா். இந்தநிலையில் ஜொ்லினுக்கு தீடீரென்று பணம் எங்கிருந்து வந்தது என்ற சந்தேகம் அக்கம் பக்கத்தில் ஏற்பட்டது. இதில் ஜொ்லினுக்கு புதையல் கிடைத்ததாக அவருடைய நண்பா் வெளியே சென்னாா்.

Advertisment

இந்த விசயம் கருங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலா்கள் ஜோண்ஸ் மற்றும் ரூபினுக்கு தொியவர இதனால் ஜொ்லீனை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டனா். இவா்களுடன் கருங்கல் இன்ஸ்பெக்டா் பொன் கீதாவும் இணைந்தாா். பின்னா் இன்ஸ்பெக்டா் ஆலோசனையில் அந்த இரு காவலா்களும் சில ரவுடிகளும் சோ்ந்து ஜொ்லீனை கடத்தி சென்று வள்ளியூாில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து விட்டு புதையல் எங்கே என கேட்டு சித்ரவதை செய்தததோடு அவனிடமிருந்த இரண்டு சொகுசு காா்கள் மற்றும் 8 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனா்.

பின்னா் அந்த கும்பலிடமிருந்து தப்பிய ஜொ்லின் குளச்சல் உதவி சூப்பிரண்டிடம் புகாா் கூறினாா். இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாாித்து வந்தனா். இதில் அந்த பகுதியில் உள்ள வசதியானவா்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் இந்த இன்ஸ்பெக்டா் மற்றும் ரவுடி குமபல் ஈடுபட்டு வந்தது. அதன்படி தான் ஜொ்லினையும் மிரட்டி புதையலையும் பறித்து விடலாம் என திட்டமிட்டு அதில் மாட்டி கொண்டனா்.

இதில் மூளையாக செயல் பட்டு வந்த கருங்கல் பெண் இன்ஸ்பெக்டா் பொன் கீதா மற்றும் காவலா்கள் ஜோண்ஸ், ரூபின் இன்று சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனா். மேலும் இதில் தொடா்புடைய நாகா்கோவில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிாியா் சுரேஷ்குமாா், மற்றும் ஜொின் ராபி, கிருஷ்ணகுமாா் ஆகிய 3 போ் கைது செய்யபட்டுள்ளனா். மேலும் இன்ஸ்பெக்டா் உட்பட தலைமறைவாக உள்ள ரவுடிகளை தனிப்படையினா் தேடிவருகி்றது. இச்சம்பவம் குமாி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kanyakumari suspended woman police inspector
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe